இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு!

Share this News:

புதுடெல்லி (21 ஏப் 2021): கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியுள்ளது.

அதன்படி, இனி கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இந்த விலை மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தனித்தனியே விலையை நிர்ணயித்துள்ள சீரம் நிறுவனம் இந்த விலை அமெரிக்கா, ரஷியா, சீனாவில் விற்பனையாகும் கொரோனா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது குறைவுதான் என தெரிவித்துள்ளது.

தங்கள் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதம் மத்திய அரசு செயல்படுத்தும் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கும், 50 சதவிகித தடுப்பூசி உற்பத்தி மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கும் கொரோனா தடுப்பூசி டோஸ் விலையை உயர்த்தியுள்ளபோதும் மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை முந்தைய விலையான 250 ரூபாய்க்கே தொடர்ந்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply