பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் – நீதிமன்றம் தீர்ப்பு!

414

லக்னோ (01 செப் 2021): பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், பசு பாதுகாப்பு அடிப்படை உரிமை என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மாடு அறுத்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் முதியவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் .பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுகுறித்து நீதிபதி சேகர் குமார் யாதவ் தனது 12 பக்க உத்தரவில் “வேதங்கள் மற்றும் மகாபாரதம் போன்ற இந்தியாவின் பண்டைய நூல்களில் இந்திய கலாச்சாரத்தை வரையறுக்கும் மற்றும் இந்தியா அறியப்பட்ட பசு மாடு ஒரு முக்கியமான பகுதியாக காட்டப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதைப் படிச்சீங்களா?:  முஸ்லிம் மத அறிஞர் கைது - மதசார்பற்ற கட்சிகள் மவுனம்!

“சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் பசு பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஒரு நாட்டின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை பாதிக்கப்படும்போது, ​​நாடு பலவீனமடைகிறது என்பதை நாங்கள் அறிவோம்,” என்றும் அவர் கூறினார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள பசு காப்பகங்களின் நிலை குறித்து கவலை தெரிவித்த நீதிபதி, பசு பாதுகாப்பு பற்றி பேசுவோரும் விலங்குகளை உணவாக உண்ணுவது குறித்து குறித்து நீதிபதி வேதனையடைந்தார்.