பாரத் பந்த்தின்போது கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் முடிவு!

Share this News:

புதுடெல்லி (07 டிச 2020): விவசாயிகளின் பாரத் பந்த்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது

கடைகளை வலுக்கட்டாயமாக மூட அனுமதிக்கப்படாது. சாதாரண வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள். என டெல்லி காவல்துறை கூற்றுப்படி, எச்சரிித்துள்ளது.

மத்திய அரசின் விவசாயிகளின் சட்டங்களை வாபஸ் பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பாரத பந்த் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பந்த்திற்கு காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஆதரவை அறிவித்துள்ளன.

மத்திய அரசுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் சட்டங்கள் திரும்பப் பெறப்படாததால் விவசாயிகளின் போராட்டம் நேற்று முதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லியில் உள்ள நான்கு எல்லைகளும் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.

டெல்லி சரக்கு சங்கம் மற்றும் சுற்றுலா போக்குவரத்து சங்கம் ஆகியவை பந்திற்கு ஆதரவாக வந்துள்ளன. விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டியதன் அவசியத்தை பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்த திட்டமிடப்பட்ட நான்காவது சுற்று பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறும்.


Share this News:

Leave a Reply