வேளாண் சட்டம் மீ ண்டும் கொண்டுவரப்படும் – பாஜக எம்பி சாக்‌ஷி மகாராஜ்!

539

புதுடெல்லி (22 நவ 2021): சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பாஜக எம்பி சாக்ஷி மகராஜ், மீண்டும் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில். மசோதாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், அவை மீண்டும் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும். என தெரிவித்தார்.

மேலும். “மோடிஜியின் பெருந்தன்மைக்கு நான் நன்றி கூறுகிறேன். சட்டத்தின் ஆட்சியை விட தேசத்திற்கு அவர் முன்னுரிமை அளித்தார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் மற்றும் காலிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பியவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைத்துள்ளது” என்று எம்பி சாக்ஷி மகாராஜ் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை பாஜக மீண்டும் கொண்டு வரக்கூடும் என்று சமாஜ்வாடி கட்சி கவலை தெரிவித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடுவேன் - பில்கீஸ் பானு திட்டவட்டம்!

SP தலைவர்களின் கூற்றுப்படி, சாக்ஷி மகராஜ் எம்பி மற்றும் ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவின் அறிக்கை மீண்டும் சட்டம் கொண்டு வரப்படும் என்பதைக் காட்டுகிறது. இதையெல்லாம் உணர்ந்து, 2022ல் விவசாயிகள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று SP தலைவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் உ.பி தேர்தலுக்கும் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சாக்ஷி மகராஜ் கூறினார். 403 உறுப்பினர்களை கொண்ட உ.பி., சட்டசபையில், 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., ஆட்சியை தக்க வைக்கும். பிரதமர் மோடிக்கும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் ஈடு இணை யாரும் இல்லை என்று சாக்ஷி மகராஜ் கூறினார்.