இவ்வருடம் ஹஜ் செய்ய எத்தனை இந்தியர்களுக்கு அனுமதி?- மத்திய ஹஜ் கமிட்டி விளக்கம்!

புதுடெல்லி (25 மே 2021): இந்தியாவில் இருந்து 5,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக மத்திய ஹஜ் கமிட்டி நம்பிக்கை தெரிவித்துளளது. எனினும் மாநில வாரியாக எவ்வளவு பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்ற விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

வரும் ஜூலை மாதம் 2021 வருடத்திற்கான ஹஜ் நடைபெறவுள்ள நிலையில் 60,000 ஹஜ் பயணிகளை மட்டுமே இவ்வருடம் அனுமதிக்க சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. உள்நாட்டை சேர்ந்த 15,000 பேரையும் பிறநாடுகளை சேர்ந்த 45,000 பயணிகளையும் அனுமதிக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது

இந்நிலையில் இந்தியாவில் இருந்து 5,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக மத்திய ஹஜ் கமிட்டி நம்பிக்கை தெரிவித்துளளது. எனினும் முழு தகவல் வெளியாகவில்லை . அதேவேளை 18 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளோரை அனுமதிக்க போவது இல்லை என்றும், கடந்த 6 மாதங்களில் மருத்துவமனைகளில் எந்த நோய்க்காகவும் அனுமதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.