டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் முழுமையாக மீண்டும் திறப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு!

Share this News:

புதுடெல்லி (15 மார்ச் 2022): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் உள்ள மசூதி வளாகம் முழுவதையும் தொழுகைக்காக மீண்டும் திறக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யுமாறு டெல்லி வக்ஃப் வாரியத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸை மீண்டும் திறக்க வக்ஃப் வாரியத்தின் மனுவைக் கையாளும் நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி, உடனடியாக ஹஸ்ரத் நிஜாமுத்தீன் மசூதியை திறப்பது குறித்து டெல்லி வக்பு வாரியம் காவல் நிலையத்தின் எஸ்எச்ஓவிடம் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

நாடெங்கும் கொரோனா வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து மார்ச் 3, 2020 முதல் மர்கஸ் மூடப்பட்டது.

முந்தைய விசாரணையில், ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜத் நாயர், ஐந்து பேர் தொழுகை செய்வதற்கு முன்பே அனுமதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் அதைப் பின்பற்றலாம் என்றும் கூறினார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மசூதி வளாகத்தை ஏன் திறக்கக்கூடாது? வளாகத்தை திறப்பதற்கு தடை விதிக்க எந்தக் காரணமும் இல்லை என்று வாதிட்டார்.

இந்த விசாரணையின் முடிவில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply