இந்துத்துவாவினரால் எரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா – உ.பியில் பரபரப்பு!

லக்னோ (26 டிச 2021): நேற்று நாடெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆனால் லக்னோவில் கிறிஸ்தவர்களை எதிர்த்து சர்வதேச இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரீய பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது ஆக்ரா மகாத்மா காந்தி மார்க் செயின்ட் ஜான்ஸ் கல்லூரிக்கு அருகில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைக்கு இந்துத்துவா அமைப்பினர் தீ வைத்தனர்.

அப்போது பேசிய ராஷ்ட்ரிய பஜ்ரங் தளத்தின் தலைவர் அஜு சவுகான், “கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா மூலம் பரிசுகளை விநியோகித்து குழந்தைகளை கிறிஸ்தவ மதத்திற்கு இழுக்கின்றனர். சாண்டாவின் ஒரே நோக்கம் பரிசு கொடுப்பது அல்ல, இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவது” என்று தெரிவித்தார்.

மற்றொரு தலைவரான அவதார் சிங், மிஷனரிகள் சேரிகளுக்குச் சென்று இந்துக்களை மதம் மாற்றுவதைக் கண்டுள்ளதாகக் கூறினார்.

இந்துத்துவாவினர் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் சவப்பெட்டிகளையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல பாஜக ஆளும் கர்நாடகாவிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சீர்குலைந்தன. மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இந்துத்துவாவினர் தடுத்துள்ளனர். பள்ளி அதிகாரிகளையும் அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது.

ஹாட் நியூஸ்:

குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக – கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஆமதாபாத் (05 டிச 2022): பாஜக தற்போது ஆண்டு வரும் மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், குஜராத்திலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக...

அடிக்குது புயல் – வெளுக்குது மழை!

சென்னை (09 டிச 2022): சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாண்டஸ் புயலால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ....

எஸ் எம் எஸ்ஸில் பூத் சிலிப் அனுப்பிய பாஜக – அதிர்ச்சியான வாக்காளர்கள்!

காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று...