Home இந்தியா முஸ்லிம் பழ வியாபாரிகளை புறக்கணிக்க இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் அழைப்பு!

முஸ்லிம் பழ வியாபாரிகளை புறக்கணிக்க இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் அழைப்பு!

பெங்களூரு (06 ஏப் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் பழ வியாபாரிகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் இந்துத்துவாவினரின் அடாவடி எல்லை மீறி சென்றுகொண்டுள்ளது. ஹிஜாப்களுக்கு எதிரான பிரச்சாரங்கள், கோவில் கண்காட்சிகளில் முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிப்பு, ஹலால் இறைச்சி, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துதலுக்கு எதிர்ப்பு என கூக்குரல் இட்டு வரும் இந்துத்துவாவினர், இப்போது முஸ்லிம் பழ வியாபாரிகளைக் குறிவைத்து, மொத்த பழச் சந்தையில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள இந்து ஜனஜக்ருதி சமிதியின் ஒருங்கிணைப்பாளர் சந்துரு மோகர் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில், பெரும்பாலான பழ வியாபாரங்கள் முஸ்லிம்களால் செய்யப்படுவதாகக் கூறியுள்ள அவர், இந்து விற்பனையாளர்களிடமிருந்து பழங்களை வாங்குமாறு இந்துக்களை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பழ வியாபாரத்தில் முஸ்லிம்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து இந்துக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்து விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே பழங்களை வாங்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன், ”என்று மோகர் கூறினார்.

இந்துத்துவா அமைப்பான ஸ்ரீராம சேனையின் சித்தலிங்க சுவாமிகளும் முஸ்லிம் பழ வியாபாரிகளை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்..

இதைப் படிச்சீங்களா?:  பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

“முஸ்லிம்களை வியாபாரம் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை;” அவர் மேலும் கூறினார், “சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் இந்து இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கூறுகிறோம், முஸ்லிம்கள் விலைகளை ஆணையிட முடியாது.”

இருப்பினும், கோலார் மாவட்ட மாம்பழ உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நீலட்டூர் சின்னப்ப ரெட்டி கூறுகையில் இந்துத்துவாவினரின் இந்த பிரச்சாரத்தால் முஸ்லிம்களின் பழ வியாபாரம் பாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற பிரச்சாரங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு சிறந்த விலை மற்றும் லாபகரமான விலைகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று ரெட்டி கூறியுள்ளார்.

இத்தனை வருடங்களாக விவசாயிகளுக்கு சந்தை வசதிகளை முஸ்லிம்கள் வழங்கி வருவதால் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான இத்தகைய பிரச்சாரம் வெற்றியடையாது என்றும் அவர் கூறினார்.

உங்களுடன் வாசிப்பவர்கள்

தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் – கலக்கத்தில் பெரிய தலைகள்!

சென்னை (01 டிச 2022): சமீபத்திய நிகழ்வுகளால் தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் திருச்சி...

ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது – எடப்பாடி பழனிச்சாமி!

கோவை (02 டிச 2022): ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது என்று திமுகவை சாடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆளும் திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண...

போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் – பாஜக எம்பி குற்றச்சாட்டு!

லக்னோ (01 டிச 2022): போலி நெய்களை விற்பனை செய்வதாக சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது பாஜக எம்.பி. குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார் உத்தரபிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் பகுதியை சேர்ந்த பிரிஜ் பூஷன்...

சமூக பொருளாதார அடிப்படையில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

சென்னை (03 டிச 2022): சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள லயோலா கல்லூரியின் லிபா வளாகத்தில் வர்த்தக மேலாண்மை துறை சார்பில் திராவிட மாடல் வர்த்தக முன்னேற்றம் மற்றும் மனித மேம்பாடு என்ற...