வட இந்தியாவில் இடி மின்னல் தாக்கி 68 பேர் பலி!

495

லக்னோ (12 ஜூலை 2021): வட இந்தியாவில் பெய்துவரும் பலத்த மழையாலும் மின்னல் தாக்கியதில் 68 பேர் இறந்துள்ளனர்.

வட இந்தியாவில் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 20 பேரும், மத்திய பிரதேசத்தில் ஏழு பேரும் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் பலியானவர்களில் 7 பேர் குழந்தைகள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது!

கான்பூர் தேஹத் மற்றும் ஃபதேபூரில் ஐந்து பேரும், உன்னாவ், ஹமீர்பூர், சோன்பத்ரா, பிரதாப்கர் மற்றும் மிர்சாபூரில் தலா இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.