இந்திய இங்கிலாந்து விமான சேவை ரத்து!

புதுடெல்லி (21 டிச 2020): இந்திய இங்கிலாந்து விமான சேவையை ரத்து செய்வதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து சேவைக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் அனைத்து வகை விமானங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதிய வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டே இந்த விமான போக்குவரத்து தடை அமல்படுத்தப்படுகிறது.

இந்த தடை உத்தரவு நாளை (டிசம்பர் 22) இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31 இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

எஸ் எம் எஸ்ஸில் பூத் சிலிப் அனுப்பிய பாஜக – அதிர்ச்சியான வாக்காளர்கள்!

காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று...

மான்டோஸ் புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கலாம்!

சென்னை (07 டிச 2022): வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று மாலைக்குள் புயலாக மாறி, நாளை காலை தமிழக - ஆந்திரா...

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

புதுடெல்லி (08 டிச 2022): இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.