கறுப்புப் பணம் கொள்ளை தொடர்பு – சூப்பர் ஸ்டாரிடம் விசாணை!

Share this News:

திருவனந்தபுரம் (06 ஜூன் 2021): கேரளாவில் பெரும் புயலை கிளப்பியுள்ள கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளா சட்டசபை தேர்தலின் போது கொடக்கர என்ற இடத்தில் ரூ3.5 கோடி கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் பாஜகவின் தேர்தல் செலவுகளுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கேரளா சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணயில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ 1.25 கோடி பணம் மீட்கப்பட்டது. இக்கொள்ளை தொடர்பாக தர்மராஜன் உள்ளிட்ட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொள்ளை கும்பலுக்கு உதவியதாக பாஜக, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் போலீசார் விசாரணையில் சிக்கி உள்ளனர்.

மேலும் நடத்தப்பட்ட விசாணையில், பாஜகவின் திரிசூர் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியிடமும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். திரிசூர் தொகுதியில் பாஜகவின் தேர்தல் செலவுக்காகவே இந்த பணம் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இது கேரளாவில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply