காங்கிரஸ் மீது கபில் சிபல் நேரடி பாய்ச்சல்!

269
Kapil Sibal
Kapil Sibal

புதுடெல்லி (16 நவ 2020): பாஜகவை சமாளிக்க காங்கிரசுக்கு தெரியவில்லை என்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாழிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவிக்கையில், தொடர்ச்சியான தோல்விகள் மேலும் தோல்விக்கே வழிவகுக்கும், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸால் ஒரு வலுவான மாற்றத்தை செய்ய இயலவில்லை, என்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

பீகார் தோல்வியை சுட்டிக் காட்டி பேசியுள்ள கபில் சிபல், பீகாரில் மட்டுமல்ல, நாட்டில் எங்கும் காங்கிரஸால் பாஜகவை வெல்ல முடியும் என்று தெரியவில்லை . கட்சி வட இந்தியாவில் அதன் செல்வாக்கை இழந்துள்ளது. பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸை மக்கள் பார்க்கவில்லை. தவறை சரிசெய்ய தலைமை தயாராக இல்லை என்றால், காங்கிரஸ் மேலும் பின்தங்கும் நிலை ஏற்படலாம். என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  இந்தியாவில் எகிறும் கொரோனா பரவல் - ஒரேநாளில் இவ்வளவா?

காங்கிரசின் பிரச்சினைகள் குறித்து பேச எந்த தளமும் இல்லாததால் வெளிப்படையாக பதிலளிப்பதாக கபில் சிபல் கூறினார்.