ராஜீவ் காந்தி பெயரில் விருது அறிவித்து ஒன்றிய பாஜக அரசுக்கு சிவசேனா அரசு பதிலடி!

544

மும்பை (11 ஆக 2021): ஐடி துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் மகாராஷ்டிரா அரசு விருது அறிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் விருது, ஜர் தியானசந்த் கேல் ரத்னா என்று மாற்ற மோடி அரசு எடுத்துள்ள நிலையில் ஒன்றிய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒன்றிய பாஜக அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தவ் தாக்கரே அரசு எதிராக அதிரடி காட்டியுள்ளது.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ராஜீவ்காந்தி விருது வழங்குவது பெருமையாக உள்ளது என்றார்.

இதைப் படிச்சீங்களா?:  மகாராஷ்டிராவில் சிவசேனா போராட்டம் நடத்த திட்டம்!

மேலும் விருது வென்றவர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான பணிகள் நிறைவடைந்துள்ளன. முதல்வர் உத்தவ் தாக்கரே விருதை வழங்குவார். விருதுகள் ஆகஸ்ட் 20 அன்று அறிவிக்கப்பட்டு அக்டோபர் 30 க்கு முன் வழங்கப்படும். இந்த விருது அடுத்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வழங்கப்படும் என்று சதேஜ் படேல் கூறினார்.

ராஜீவ் காந்தி 1984 முதல் 1989 வரை இந்தியாவின் ஆறாவது பிரதமராக இருந்தார் என்பதும், நாட்டின் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை முன்னெடுத்த ராஜீவ் காந்தி, கணினிகளை மலிவு விலையில் மற்றும் உலகளாவிய தொலைத்தொடர்புகளை உருவாக்கினார் எனபதும் குறிப்பிடத்தக்கது.