மதவாத இந்துத்வா பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – மாயாவதி திட்டவட்டம்!

Share this News:

லக்னோ (02 நவ 2020): பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவுடன் இணைவதற்கு பதிலாக அரசியலை விட்டு விலகிவிடலாம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துத்துவத்தையம் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வரும் பாஜகவுடன் பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஒருபோதும் இணைந்து செயல்படாது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சி வரும் தேர்தல்களில் இணைந்து செயல்படும் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியும்இணைய வாய்ப்பே
இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி பாஜக போன்ற வகுப்புவாதக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடியாது” என்று மாயாவதி கூறினார்.

மேலும் காங்கிரசும் சமாஜ்வாடி கட்சியும் நம்பிக்கை இழந்து வருவதாகவும், வாக்குகளை சிதைத்து அதன் மூலம் முஸ்லிம்களை தங்களிடமிருந்து அந்நியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply