ஹிஜாப் விவகாரம் – சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்புக்கு இந்தியா பதில்!

Share this News:

புதுடெல்லி (16 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளமை மற்றும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.

மேலும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி தீர்க்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை பதிலளித்துள்ளது. ஒஐசியின் கண்டனத்திற்கு பதிலளித்துள்ள இந்தியா, ஓஐசியின் கூட்ட நிகழ்வு இவ்விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply