19 வயது முஸ்லீம் வாலிபர் படுகொலை -4 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கைது!

763

கடக் (19 ஜன 2022): கர்நாடகாவில் 19 வயது வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தின் நர்குண்டு நகரில் சமீர் மற்றும் ஷம்சீர் ஆகியோர் திங்கள்கிழமை இரவு 7:30 மணியளவில் இருச்சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட கும்பல் அவர்களது வாகனத்தை மறித்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. அவர்களிடமிருந்து இருவரும் தப்பிச் செல்ல முயன்ற போது விடாமல் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சமீர்
ஹூப்ளியில் உள்ள கர்நாடக மருத்துவ அறிவியல் நிறுவனம் (கிம்ஸ்) மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு இறந்தார்.

தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களின் பெயர்களுடன் காவல்துறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தனர். இப்புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து ஆர்எஸ்எஸ்-பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த 4 பேரை நர்குண்டு காவல்துறையினர் கைது செய்தனர். கத்தியால் குத்தப்பட்ட ஷம்சீர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.