2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

புதுடெல்லி (31 மார்ச் 2022): 2022 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவானது நாளை மறுநாள் தொடங்கி மே 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு 16 லட்சத்து 14ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட் நியூஸ்: