தன்னைப் பற்றிய பிரேக்கிங் நியூசை தானே வாசித்த செய்தி வாசிப்பாளர் – VIDEO

873

திருவனந்தபுரம் (13 பிப் 2020): தன்னைப் பற்றிய செய்தியை தானே வாசித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீஜா ஷியாம்.

கேரளாவில் உள்ள மாத்ருபூமி என்ற மலையாள தொலைக்காட்சியில் தலைமை இணை ஆசிரியராக இருக்கும் ஸ்ரீஜா ஷியாம் என்பவர் நேற்று காலையில் வழக்கம்போல் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கேரள அரசு சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது ஸ்ரீஜாவுக்கு என அறிவித்தது. இதனை பிரேக்கிங் செய்தியாக மாத்ருபூமி வெளியிட அந்த செய்தியை ஸ்ரீஜாவே வாசித்தார்.

தன்னுடைய புகைப்படமும் தன்னைப்பற்றிய செய்தியும் பிரேக்கிங் செய்தியில் இடம்பெறுவதை பார்த்து ஒருநொடி இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ஸ்ரீஜா, உடனே சுதாரித்து கொண்டு, தான் பெற்ற விருது குறித்த செய்தியை அவரே வாசித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Sreeja Shyam അല്പസമയം മുൻപ് വാർത്തവായിക്കുന്നതിനിടയിൽ: മികച്ച വാർത്താ അവതാരകയ്‌ക്കുള്ള സംസ്ഥാന സർക്കാർ പുരസ്കാരം മാതൃഭൂമി ന്യൂസിലെ ചീഫ്‌ സബ് എഡിറ്റർ എൻ. ശ്രീജയ്‌ക്ക് ലഭിച്ചു.വാർത്ത കാണുന്നവർ : ആരാണയാൾ?അൽ ശ്രീജ : ഞാനാണയാൾ 😬😬😬* * *കൺഗ്രാാറ്റ്സ് മുത്തുമണ്യേ… 😘😘😘😘😘

Posted by Habeeb Anju on Tuesday, February 11, 2020

இதைப் படிச்சீங்களா?:  பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் கைது!