மன்மோகன் சிங் இப்போது பிரதமராக இல்லாததை உணர்கிறோம் : ராகுல் காந்தி ட்வீட் !

382

புதுடெல்லி (26 செப் 2020):முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் 88வது பிறந்த தினம் இன்று.

அவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். ராகுல் காந்தியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

அதில் மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா தற்போது உணர்கிறது. அவருடைய நேர்மை, கண்ணியம் மற்றும் நாட்டுக்கான அர்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் தரும் ஒன்றாக அமைந்துள்ளது. அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மிகவும் அன்பான வருடம் அவருக்கு அமையும் என்று அந்த ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.