பாதுகாப்பு படை வீரர்கள் பலி – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

113

புதுடெல்லி (05 ஏப் 2021): சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 22 பேர் உயிர்தியாகம் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

இதைப் படிச்சீங்களா?:  மசூதி குறித்த நீதிமன்ற உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது - முஸ்லீம் சட்டவாரியம் கண்டனம்!

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை மோசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. திறமையற்ற செயல்பாட்டால்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உளவுத்துறையின் தோல்வி என்று இதை கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.