டெல்லி கலவரம் – சோனியா காந்தி, ராகுல் காந்தி கவலை!

505

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லி கலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கவலை தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது.

ஞாயிறன்று டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போராட்டக் காரர்களை நாங்களே அப்புறப்படுத்துவோம் என்றும் போலீஸை கண்டுகொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்திருந்த நிலையில் கலவரம் ஏற்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.

இந்நிலையில் இந்நிலையில், டில்லி கலவரம் தொடர்பாக காங்., தலைவர் சோனியா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் நடந்த வன்முறை கண்டனத்துக்குரியது. காந்தியடிகள் மண்ணில் வன்முறைக்கு இடமில்லை. டில்லியில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல காங்,. எம்.பி. ராகுல் காந்தி,கலவரம் மிகவும் கவலை அளிக்கிறது. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அமைதி வழி போராட்டம் தான் தவிர வன்முறையால் எந்த தீர்வும் கிடைக்காது. வன்முறையை கைவிட்டு கலவரக்காரர்களிடமிருந்து டில்லிவாசிகள் விலகியிருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்..