இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு!

Share this News:

புதுடெல்லி (28 ஜன 2020): இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் வேடித்துள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்தும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இநிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை பெறும் அகதிகள் தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது குறித்த சான்றிதழ், விண்ணப்பங்களுடன் இணைப்பது கட்டாயம் என டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் உலா வருகின்றன. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிக்கையோ, அரசாணையோ வெளியாகவில்லை


Share this News:

Leave a Reply