சட்டசபையில் சுதந்திரப் போராளிகளின் படத்துடன் சாவர்க்கர் படம்!

280

லக்னோ (20 ஜன 2021): உத்திர பிரேதச சட்டசபையில் சுதந்திரப் போராளிகளின் படத்துடன் சாவர்க்கரின் படமும் நிறுவப்பட்டமைக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தொடர்பாக உத்தரபிரதேசத்தில் பெரும் எதிர்ப்பு வெடித்தது. சாவர்க்கரின் படம் உ.பி. சட்டசபை விதான் பரிஷத்தில் எடுக்கப்பட்டது.

உபி சட்டசபையில் சாவர்க்கரின் படத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வெளியிட்டார். இதனை அடுத்து சுதந்திரப் போராளிகளின் படத்துடன் சாவர்க்கரின் படமும் நிறுவட்டப்பட்டன.

இதைப் படிச்சீங்களா?:  டிவி விவாத நேரடி நிகழ்ச்சியில் பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு!

இந்த சம்பவத்திற்கு காங்கிரசும் சமாஜ்வாடி கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனதோடு . காங்கிரஸ் எம்.எல்.சி தீபக் சிங், சட்டமன்றத்தின் தலைவர் ரமேஷ் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில் படத்தை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் சாவர்க்கரின் படம் பிஜேபி அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டும், சட்டசபையில் வைக்கப்பட்ட வேண்டியது அல்ல. என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.