அனாதை இல்லத்தில் வளர்ந்த ஷபானா ஷேக் – நீட் தேர்வில் வெற்றி!

Share this News:

தானே (21 பிப் 2022): நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததன் மூலம், தன்னாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் 22 வயது அனாதை பெண் ஷபானா ஷேக்.

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு, ஷபானா ஷேக் தனது ஒரு வயது சகோதரனுடன் மும்பை மருத்துவமனையிலிருந்து மீட்கப்பட்டு பத்லாபூரைச் சேர்ந்த அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில் அனாதை இல்ல ஆதரவுடன் கல்வி பயின்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதினர். ஆனால், அதில் திருப்தி அடையாததால், கடந்த ஆண்டு மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற்று இறுதியாக, அவுரங்காபாத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் ஷபானாவுக்கு இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மகப்பேறு மருத்துவர் ஆக விதும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் “கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல், எதிர்காலத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.” என்றார்.

பரீட்சைக்குத் தயாராகும் போது அனாதை இல்லம் தேவையான அனைத்து உதவியையும் எனக்கு வழங்கியது, அதுதான் எனது குடும்பம் என்று ஷபானா தெரிவித்துள்ளார்.

டாக்டராகி சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ள ஷபானா, பொதுவாக நம்ம்பிக்கை இழந்து நிற்கும் மற்ற அனாதை குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார்.


Share this News:

Leave a Reply