நான் காங்கிரஸ் தலைவரானால் இதெல்லாம் நடக்கும் – சசிதரூர் உறுதி!

Share this News:

கவுஹாத்தி (16 அக் 2022): காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாஜகவில் இணையும் காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்கு சேகரித்து கவுஹாத்தி சென்ற சசிதரூர் கூறுகையில், காந்தி குடும்பம் எப்பொழுதும் காங்கிரஸுடன் இருக்கிறது, நாங்களும் அப்படித்தான். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸின் வெற்றி என்ற மனோபாவத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம். கார்கே எனக்கும் தலைவர்தான். நாங்கள் எதிரிகள் அல்ல. நான் ஒரு வேட்பாளர் அவ்வளவுதான். கார்கே எங்கு சென்றாலும், மூத்த தலைவர்கள் அவருடன் இருக்கிறார்கள். ஆனால் நான் எங்கு சென்றாலும், சாமானியர்கள் என்னுடன் இருக்கிறார்கள்” என்றார்.

புதிய தலைமையின் கீழ் காங்கிரஸ் மீண்டும் மக்களுக்காக பாடுபடும் என்றும் தரூர் கூறினார். 2024 பொதுத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவதே புதிய தலைவரின் முன் உள்ள பணி. தேசிய அளவில் புதிய கூட்டணியை அமைப்பதே முதல் பொறுப்பு என்றார் தரூர்.

சசி தரூர் மேலும் கூறுகையில், “கட்சியின் இளம் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. ஆனால் மூத்த தலைவர்கள் கார்கேவுடன் உள்ளனர் என்றார்.


Share this News:

Leave a Reply