கர்நாடகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர மாணவிகளுக்கு அனுமதி!

Share this News:

உடுப்பி (07 பிப் 2022): பல நாள் போராட்டத்துக்குப் பிறகு, கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தபுரா பகுதியில் உள்ள அரசு கல்லூரி வளாகத்திற்குள் திங்கள்கிழமை ஹிஜாப் அணிந்த மாணவியர் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், அவர்கள் தனி வகுப்பறைகளில் அமர வைக்கப்படுவார்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குந்தபுராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு இல்லை என்று உடுப்பி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.டி.சித்தலிங்கப்பா தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை அரசு பியு கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி மாணவர்கள் கல்லூரி வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அருகே கத்தியை ஏந்திய இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர் எனவும் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையே பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சீருடையை மட்டுமே மாணவர்கள் அணிய முடியும் என்றும், வேறு எந்த மத வழிபாட்டு முறைகளும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படாது என்றும் பல்கலைக்கழகத்திற்கு கல்வி வாரியம் சனிக்கிழமை சுற்றறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply