விடுதலையான தப்லீக் ஜமாத்தினருக்கு உதவ வேண்டும் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Tabligh Jamath
Share this News:

புதுடெல்லி (22 டிச 2020): ஒன்பது மாத சட்ட போராட்டத்திற்குப் பிறகு அணைத்து தப்லீக் ஜாமத்தினரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப் பட்டதோடு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் நாடு திரும்ப மத்திய அரசு உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாஅத் சபையில் பங்கேற்றதன் மூலம் கோவிட் -19 மேலும் பரவியதாக அப்பாவி தப்லீக் ஜமாத்தினர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறி, டிசம்பர் 15 ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது.

இந்நிலையில் 14 நாடுகளைச் சேர்ந்த 36 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் நாடு திரும்ப தடை எதுவும் இருக்கக் கூடாது என உச்ச நிதிமன்றத்தில் முறையிடப் பட்டது. இதன் அடிப்படையில் மத்திய அரசு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் சிரமமின்றி நாடு திரும்ப உதவுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply