வெடிகுண்டு வீச்சில் அமைச்சர் ஜாகிர் உசைன் படுகாயம் – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

150

கொல்கத்தா (18 பிப் 2021): மேற்கு வாங்க தொழிலாளர் துறை அமைச்சர் ஜாகிர் உசைன் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டார்.

மம்தா அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஜாகிர் உசைன் கொல்கத்தா நகருக்கு செல்வதற்காக நிம்திதா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், சில மர்ம நபர்கள் திடீரென அவர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் பலத்த காயமடைந்து உள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைப் படிச்சீங்களா?:  டிவி விவாத நேரடி நிகழ்ச்சியில் பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜாகிர் உசைனை மம்தா நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். உடன் இருந்த மருத்துவர்களிடம் உசைனுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து உள்ளார். மேற்கு வங்காள சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.