கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா!

1453
Yediyurappa
Yediyurappa

பெங்களூரு (26 ஜூலை 2021): கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி எடியூரப்பா 4வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்ற எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று இன்றுடன் (ஜூலை 26) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதைப் படிச்சீங்களா?:  தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் - கலக்கத்தில் பெரிய தலைகள்!

கடந்த 16ம் தேதி டில்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது 2 ஆண்டுகள் நிறைவடைவதால் நிபந்தனைப்படி முதல்வர் பதவியை விட்டு விலகுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதன் அடிப்படையில் எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.பிற்பகலில் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.