தோஹா சர்வதேச புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்!

630

தோஹா (13 ஜன 2022): 31வது தோஹா சர்வதேச புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது.

தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது, மேலும் கோவிட் பரவலை அடுத்து மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 30 சதவீதத்தினர் மட்டுமே ஒரே நேரத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்படும். தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் கடந்த ஒரு வருடத்தில் கோவிட் நோயிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே உள்ளே செல்லலாம்.

இந்த ஆண்டு, 37 நாடுகளில் இருந்து 430 பதிப்பாளர்கள் மற்றும் 90 ஏஜென்சிகள் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். வெள்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் புத்தகத் திருவிழாவை பார்வையாளர்கள் பார்வையிடலாம்.

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் கருப்பொருள் ‘அறிவு ஒளி’ என்பதாகும். தோஹா சர்வதேச புத்தகத் திருவிழா ஜனவரி 22ஆம் தேதி நிறைவடைகிறது.