அபுதாபி ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு இந்தியர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்!

1587

அபுதாபி (18 ஜன 2022): அபுதாபி ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என மூவர் கொல்லப்பட்டனர். உலக நாடுகள் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தோடு தொடர்பில் இருப்பதாகவும் விரைவில் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தாக்குதலில் காயமடைந்த 6 பேரில் இரண்டு பேர் இந்தியர்கள் என்றும் இவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர் என்ற தகவலையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.