சவுதியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் போடப்படும் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி!

916

ரியாத் (24 ஜூன் 2021): சவுதி அரேபியாவில், 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ள நிலையில், இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

சவூதி அரேபியாவில் 587 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதுவரை , 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளர். இந்த நிலையில் இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகள் கிடைப்பதைப் பொறுத்து பிற வயதினருக்கும் போடப்பட்டு வருகின்றன.

மேலும் தடுப்பூசி செயல்முறை துரிதப்படுத்தப்பட்டால் மட்டுமே, தற்போது பயணத்திற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட்டு சவுதி அரேபியாவிற்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.