இந்தியா சவூதி அரேபியா விமானபோக்குவரத்தை தொடங்க மீண்டும் பேச்சுவார்த்தை!

ரியாத் (03 ஜூன் 2021): இந்தியா சவுதி அரேபியாவுக்கு இடையேயான விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் அவுசாஃப் சயீத் மற்றும் சவூதி சிவில் ஏவியேஷன் தலைவர் இருவருக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியா சவுதி அரேபியாவுக்கு இடையேயான விமான போக்குவரத்து ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வழக்குகளின் எண்ணிக்கை குறைவதால் பயணம் மீண்டும் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா?:  இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!

பலரது சவூதி விசா காலாவதியான நிலையில் விசாக்கள் புதுப்பிக்கப்படாமல் பயணங்கள் மிகவும் சிக்கலாக உள்ளன. . இதற்கிடையில், சவூதி இந்திய தூதரகம் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை மூலம் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கலாம் என்பதே பலரது எதிர்பார்ப்பு .