தீவிர இந்துத்வாவாதி சுதிர் சவுத்ரி துபாய் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன் – துபாய் இளவரசி கடும் கண்டனம்!

Share this News:

துபாய் (25 நவ 2021): கடும் எதிர்ப்பிற்கிடையே அபுதாபி நிகழ்ச்சியில் தீவிர இந்துத்வாவாதி சுதிர் சவுத்ரி கலந்துகொள்ளவுள்ள நிலையில் துபாய் இளவரசி ஹிந்த் பின்த் ஃபைசல் அல் காசிமி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

வலதுசாரி இந்து அறிவிப்பாளரான சுதிர் சௌத்ரி, இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லீம்களை இலக்காகக் கொண்டு பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது பல பிரைம் டைம் நிகழ்ச்சிகள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபியில் பட்டய கணக்காளர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்கு சுதிர் சவுத்ரி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே துபாய் இளவரசி ஹிந்த் பின்த் ஃபைசல் அல் காசிமி சுதிர் சவுத்ரி துபாய் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சுதிர் சவுத்ரி நிகழ்ச்சிக்கு வருதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹிந்த் அல் காசிமி ICAI தலைவர் நீரஜ் ரிட்டோலியாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் அந்த கடிதத்திற்கு எந்த மதிப்பும் அளித்ததாக தெரியவில்லை. இதனை அடுத்து சுதிர் சவுத்ரி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகவே உள்ளது.

இந்நிலையில் ஹிந்த் அல் காசிமி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஹிந்த் அல் காசிமின் ட்விட்டர் பதிவில், ICAI தலைவர் நீரஜ் ரிட்டோலியா துபாயில் வசிக்கிறார். இங்கேயே பணிபுரிகிறார். ஆனால் எம் நாடு, எம் மதம் ,குறித்து எந்தவித அக்கறையும் அவருக்கு இல்லை என்பதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் எனது கடவுளையும், தீர்க்கதரிசியையும், மதத்தையும், நாட்டையும் இழிவுபடுத்தும் நபரை என் நாட்டிற்கு அனுமதிக்கும் அனைவரையும் நான் பொறுப்பாக்குகிறேன். இதனை பார்த்துக் கொண்டு நானோ என் நாட்டினரோ சும்மா இருக்கப்போவதில்லை என்பதாக ஹிந்து அல் காசிமி அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply