இந்திய பயணிகளை ஏற்க ஃப்ளை துபாய் விமான நிறுவனம் மறுப்பு!

துபாய் (06 ஆக 2021): இந்திய பயணிகளை ஏற்க இயலாது என்று ஃப்ளை துபாய் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று தளர்த்தியது. UAE விசா வைத்திருப்பவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு நேற்று முதல் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கின.

அதேவேளை ஃப்ளை துபாய் அல்லாத விமான நிறுவனங்களால் மட்டுமே முன்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால் ஃப்ளை துபாய் இந்தியவிலிருந்து வரும் பயணிகளை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ளது. அதேபோல பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளையும் ஏற்க ஃப்ளை துபாய் நிறுவனம் மறுத்துள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஃப்ளை துபாய் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிராக வலுவடையும் மாணவர்கள் போராட்டம்!

புதுடெல்லி (27 ஜன 2023): பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர். பல்கலைக்கழகங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஜேஎன்யுவில்...

சவூதியில் வீட்டு வேலை செய்பவரின் இக்காமாவை மூன்று மாதத்திற்கு புதுப்பிக்க முடியுமா?

ரியாத் (27 ஜன 2023): சவூதி அரேபியாவில் பணியாளர்கள் விசாவில் இருப்பவர்கள் 3, 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு இக்காமாவை புதுப்பிக்கலாம் ஆனால் வீட்டு விசாவில் உள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே...

சமூக ஊடகங்களில் கண்காணிப்பை கடுமையாக்கும் சவுதி அரேபியா!

ஜித்தா (23 ஜன 2023): "சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்" என்று பொதுப் பாதுகாப்புத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-பஸ்ஸாமி தெரிவித்துள்ளார். 22வது ஹஜ் உம்ரா ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய...