புனித ஹஜ் கடமைகள் நாளை முதல் தொடக்கம் -ஹஜ் செய்யும் 200க்கும் அதிகமான இந்தியர்கள் – VIDEO

513

புனித ஹஜ் கடமைகள் நாளை முதல் தொடக்கம் -ஹஜ் செய்யும் 200க்கும் அதிகமான இந்தியர்கள் – VIEDO

மக்கா (17 ஜூலை 2021): புனித ஹஜ் கடமை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.

2021 புனித ஹஜ் கடமை நாளை முதல் தொடங்குகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வருடமும் வெளிநாடுகளிலிருந்து ஹாஜிகள் யாருக்கும் அனுமதி இல்லை அதேவேளை சவூதியில் வசிக்கும் பல்வேறு நாட்டினர் 60 ஆயிரம் பேருக்கு மட்டும் ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்றவர்கள் நாளை புனித மக்காவை அடைந்து ஹஜ் கடமையை நிறைவேற்றத் தொடங்குவர். இதற்காக புனித மக்காவில் முறையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிட் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு இவ்வருட ஹஜ் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.

இதற்காக மினா, அரஃபா முஸ்தலிபா உள்ளிட்ட பகுதிகளில் ஹாஜிகளுக்கு சிறப்பு தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாள் திங்கள் கிழமை அரஃபா தினமாகும் . ஹஜ் கடமைகள் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும். ஹஜ்ஜை முன்னிட்டு ஹஜ் செய்ய அனுமதி பெற்றவர்க்ள் தவிர வேறு யாரும் மக்காவிற்குள் செல்ல அனுமதி இல்லை.

சவூதியில் வசிக்கும் 200க்கும் அதிகமான இந்தியர்கள் இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர்.