கத்தாருக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பல்!

1114

தோஹா (10 ஆக 2021): இந்திய கடற்படையின் கப்பல் Trikand (ஐஎன்எஸ் திரிகாந்த்) கத்தார் தலைநகர் தோஹாவை வந்தடைந்தது.

ஐந்து நாள் கடற்படைப் பயிற்சிக்காக இக் கப்பல் தோஹாவிற்கு வந்திருக்கிறது.

கேப்டன் ஹரீஷ் பகுகுனா தலைமையில் வந்திருக்கும் இந்தக் கப்பலை, கத்தார் கடற்படையின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

இதில் இரு நாட்டு கடற்படைகளின் பங்கேற்புடன் கூட்டுப் பயிற்சி நடைபெறும்.

இந்தப் பயிற்சியில் விமானப் பாதுகாப்பு, கடல்சார் கண்காணிப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கி இருக்கும்.

துறைமுகத்தில் மூன்று நாட்கள் மற்றும் கடலில் இரண்டு நாட்கள் என ஐந்து நாட்கள் இப்பயிற்சி நடைபெறும் இப் பயிற்சி, ஆகஸ்ட் 14 அன்று முடிவடைகிறது.