ஹிஜாபுக்கு தடை விதித்த மேலாளர் – பஹ்ரைனில் மூடப்பட்ட இந்திய உணவகம்!

மனாமா (27 மார்ச் 2022): பஹ்ரைனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டது.

பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள பஹ்ரைன் லான்டர்ன்ஸ் – இந்திய உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உணவகம் தங்களது சமூக ஊடகப் பக்கத்தில் முறைப்படி மன்னிப்புக் கேட்டது.

35 ஆண்டுகளாக சேவையில் உள்ள உணவகம், மேலாளர் செய்த தவறுக்கு வருந்துவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்தியரான மேலாளர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை உணவக ஊழியர்கள் தடுக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....