இந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி!

Share this News:

ஜித்தா (18 செப் 2020): சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘திறனை மேம்படுத்துவோம்’ என்ற தொடர் பயிற்சியை மேற்கு மாகாணம் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு ஜும் காணொளி மூலம் துவக்கியது .

உலகளாவிய கொடிய கொரோனா (கோவிட் 19) நோய் தொற்று ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்தையும் தொழில்துறையையும் மிகப்பெரியளவில் பாதித்துள்ளது. வேலை இழப்பு மற்றும் சம்பள குறைப்பு என பல பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ள சூழலில், சமூக அக்கறையுடன் இந்தியன் சோசியல் ஃபோரம், வெளிநாட்டுவாழ் இந்திய பணியாளர்களின் திறமைகளை மேம்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவும் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக்கொள்ளவும் உதவ முன்வந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 4, 2020 அன்று மைக்ரோசாப்ட் எக்செல் அடிப்படை பயிற்சி ஜூம் காணொளி மூலம் நடத்தப்பட்டது. இந்தியன் சோசியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு தலைவர் பொறியாளர் அல் அமான் அவர்கள் இப்பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்த அறிமுக உரையை ஆற்றினார்.

பயிற்சி வகுப்பின் ஆசிரியர் பொறியாளர் ஜாகிருல் ஹக் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய முறையில் எக்செல் அடிப்படை (Basic Excel) வகுப்பினை நடத்தினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட டாக்டர் அஹ்மத் பாஷா அவர்கள் அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேற்குமாகாண மத்திய கமிட்டியின் தலைவர் திரு. EM அப்துல்லாஹ் அவர்கள் பங்கேற்பாளர்களை ஊக்குவித்து துவக்க உரையை வழங்கினார். மாநில செயலாளர் திரு. தமிமுல் அன்சாரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

பயிற்சியில் பங்கேற்றவர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி பெறும் வண்ணம் கேள்வி மற்றும் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. சோசியல் ஃபோரத்தின் சமூக நலத்துறை பொறுப்பாளர் திரு. முகமது அப்பாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.


Share this News:

Leave a Reply