இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய சமூக நலப்பணிக்கான இணையதள பயிற்சி முகாம்!

535

ஜித்தா (10 நவ 2020): இந்தியன் சோஷியல் ஃபோரம் ஜித்தா மேற்கு மாகாணம் தமிழ் பிரிவு நடத்திய சமூக நலப்பணிக்கான இணையதள பயிற்ச்சி வகுப்பினை இந்தியதூதரகத்தின் தொழிலாளர் நலனுக்கான இந்திய துணை தூதர் திரு. சச்சிந்த்ர நாத் தாகூர் அவர்கள் தொடங்கி வைத்து வாழத்துரை வழங்கினார்.

அவர் தனது உரையில் இந்தியன் சோஷியல் ஃபோரம் முன்னெடுக்கும் பல்வேறு சமூக நலப்பணிகளை பாராட்டி தூதரகத்தோடு ஒருங்கிணைத்து செயல்பட்ட நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். மேலும் அதிகரித்துவரும் சமூக நலப்பிரச்சினைகளுக்கு இதுபோன்ற பயிற்சிகளும் தன்னர்வளர்களின் தேவையின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.

கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தேசிய தலைவர் சகோ.அஷ்ரப் மறையூர் அவர்கள் அனைவரையும் ஊக்கமளிக்கும் விதமாகவும் சமூகநல பணிகளின் அவசியத்தையும் இதன் மூலமாக அதிகமான தன்னார்வலர்களையும் எற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

மேலும்இந்நிகழ்ச்சியை முன்னேடுத்த தமிழ் பிரிவை பாராட்டியும் மற்றும் இதைப்போல மற்ற பிராந்திய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி தொடங்கப்படும் என்பதையும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மேற்கு மாகாண தமிழ் நாடு கமிட்டி சமூக நலத்துறை பொறுப்பாளர் சகோ. முஹம்மது அப்பாஸ் அவர்கள் எவ்வாறு சமூக நலப்பணிகளில் ஈடுபடுவது குறித்தும் குறிப்பாக சவூதி அரேபியாவில் வைத்து இறந்து போகும் இந்தியர்களின் உடல்களை அடக்கம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகளை நிகழ்கால எடுத்துக்காட்டுகளுடன் அரசாங்க வழிமுறைகளையும் மிக எளிமையான முறையில் விளக்கினார்.

இதைப் படிச்சீங்களா?:  பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் - சவுதி அரேபியா அறிவிப்பு!

இந்நிகழ்ச்சியினை மேற்கு மாகாண சென்ட்ரல் கமிட்டி தலைவர் சகோ. E.M. அப்துல்லாஹ் தலைமையுரையாற்றினார், மேற்கு மாகாண சென்ட்ரல் கமிட்டி செயலாளர் சகோ. அலி கோயா அவர்கள் வரவேற்புரையாற்றினார், மேற்கு மாகாண தமிழ்நாடு கமிட்டி தலைவர் பொறியாளர். அல்அமான் அவர்கள் அறிமுக உரையாற்றினார்,

மேற்கு மாகாண தமிழ்நாடு கமிட்டி துணைத்தலைவர் சகோ. முஹைய்யதீன் தமிழ்நாடு கமிட்டி முன்னேடுத்த சமூக நலப்பணிகளையும் மற்றும் COVID 19 கொரொனா பெருந்தொற்று காலத்தில் முன்னெடுத்த பல்வேறு சமூக நலப்பணிகளையும் பகிர்ந்துக்கொண்டார்,

சகோ. முஹம்மது ரபீக் நன்றியுரையாற்றினார், சகோ. அப்துல் ரஹ்மான் இந்நிகழ்ச்சி அனைத்தையும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாற்பதிற்கும் மேற்பட்ட தன்னார்வலளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.