மீண்டு வரும் சவூதி அரேபியா!

1105

ரியாத் (12 ஆக 2021): சவுதி அரேபியாவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா பாதிப்பிலிருந்து அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர்.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா பல வகையான மரபு மாற்றங்களால் அச்சுறுத்தி வருகிறது. எனினும் தொடக்கத்திலிருந்தே சவுதி அரேபியாவில் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் கொரோனா பாதிப்பு, கடந்த மூன்று தினங்களாக பெருமளவில் குறைந்து வருகிறது.

மேலும் நேற்று மட்டும் கொரோனா பாதித்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது நேற்று மட்டும் 1389 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பும் கடந்த 3 தினங்களாக ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை கொரோனாவால், 5,35,927 பாதிக்கப்பட்டுள்ளனர், இதில், 5,17,379 பேர் குணமடைந்துள்ளனர். 8,366 பேர் உயிரிழந்துள்ளனர்.