இந்தியாவுக்கான விமான தடையை நீக்கியது ஓமான்!

மஸ்கட் (24 ஆக 2021): இந்தியாவுக்கான விமான தடையை ஓமான் அரசு நீக்கியுள்ளது.

கோவிட் பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஓமான் தடை விதித்திருந்தது. கடந்த 4 மாதங்களாக இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு ஓமான் அரசு விதித்திருந்த விமானம் மற்றும் தரை கப்பல் போக்குவரத்து தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

ஓமான் அரசு அங்கிகரித்துள்ள Oxford AstraZeneca, Pfizer, Sputnik மற்றும் Synovac கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் பெற்றவர்கள் ஓமானுக்கு வரலாம். அதேவேளை இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் 14 நாட்கள் கழித்தே வரலாம்.

ஓமானிலிருந்து ஊருக்கு சென்று சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு ஓமான் அரசின் இந்த முடிவு நிம்மதியை அளித்துள்ளது.

ஹாட் நியூஸ்: