சவூதி நாட்டினருக்கு நிகரான மருத்துவ சிகிச்சைக்கு தகுதியான வெளிநாட்டினர்!

Share this News:

ரியாத் (25 ஜூலை 2021): பதினொரு வகை வெளிநாட்டினர், சவுதி நாட்டினரைப் போலவே மருத்துவ சிகிச்சையும், சுகாதார சேவையும் பெற தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சவூதி நாட்டின் தேசிய குடிமக்களுக்கு நிகரான முழு சுகாதார மற்றும் சிகிச்சையைப் பெறும் வெளிநாட்டினரின் பட்டியலை ஒருங்கிணைந்த தேசிய தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி சவுதி நாட்டினரின் வெளிநாட்டு மனைவிகள், சவுதி பெண்களின் வெளிநாட்டு கணவர்கள், அவர்களின் குழந்தைகள், வீட்டுப் பணியாளர்கள், கைதிகள், சமூக முகாம்களில் உள்ள மூத்தவர்கள், என அரசாங்கத்தின் செலவில் மருத்துவ வசதி பெற தகுதியானவர்களாகின்றனர்.

காசநோய் நோயாளிகள் சட்டப்பூர்வ குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், ஹஜ்-உம்ரா யாத்திரையாளர்கள், எமன் பழங்குடியினர் உள்ளிட்டவர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் அரசு மருத்துவமனைகளில் நேரடியாக சிகிச்சை பெற தகுதியானவர்கள் மேலும், சாலை விபத்துக்கள், தீக்காயங்கள் மற்றும் மூச்சுத் திணறல் என நேரடி ஆபத்தில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவு மூலம் சிகிச்சை பெற தகுதி பெற்றவர்களாகின்றனர்.


Share this News:

Leave a Reply