கத்தாரில் பள்ளி பேருந்தில் இந்திய சிறுமி மரணம்!

தோஹா (12 செப் 2022): கத்தாரில் பூட்டிய பள்ளிப் பேருந்தில் உள்ளே இந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் சிங்கவனத்தை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ என்பவரது மகள் மின்சா. இவர் கத்தார் அல்வக்ராவில் உள்ள ஸ்பிரிங் ஃபீல்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கேஜி ஒன் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை குழந்தை பேருந்தில் தூங்குவதை கவனிக்காத ஊழியர்கள் மற்ற குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டு பஸ்சை பூட்டினர்.

மதியம் தனது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக பேருந்தில் சென்றபோது மின்சா பஸ்சுக்குள் மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து அல்வாக்ரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூன்று பஸ் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹாட் நியூஸ்: