ஒருவர் ஒரு காருக்கு மேல் வாங்கத் தடை!

1410

குவைத் (23 ஆக 2021): குவைத்தில் வெளிநாட்டினர் ஒரு காருக்கு மேல் வாங்க தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒருவர் பல வாகனங்களை வாங்குவதை கட்டுப்படுத்தும் ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் போக்குவரத்துத் துறையால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு, குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது.

வணிக உரிமம் இல்லாமல் வாகனங்களை வாங்குவது, விற்பது, வாடகைக்கு விடுவது அல்லது குத்தகைக்கு விடுவதை கட்டுப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கபப்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்!

வணிக உரிமக் கட்டணத்தில் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டதால், வாகனங்களின் உரிமையை மட்டுப்படுத்த ஆய்வுக் குழு வெளிநாட்டினர் ஒருவர் ஒரு வாகனத்திற்கு மேல் வாங்கக்கூடாது என பரிந்துரைத்துள்ளது.

சில வெளிநாட்டவர்கள் 50 க்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்பதை போக்குவரத்து துறை கண்டறிந்துள்ளது. வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்களின் பெயரிலும் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து இந்த முடிவை குவைத் போக்குவரத்துத் துறை ஆய்வுக்குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.