கோவிட் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்!

484

ரியாத் (02 ஆக 2021): சவூதியில் கோவிட் தடுப்பூசி பெறாதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை சவூதி சுகாதரத்துறை விதித்துள்ளது.

குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கோவிட் தடுப்பூசியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் வேலைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேலை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை வீட்டிலிருந்தபடி பணிபுரியலாம். அதற்குள் தடுப்பூசி பெறவில்லையெனில் கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கான்வே மால்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு தடுப்பூசி பெறாதவர்கள் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விடுதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட் தடுப்பூசி பெறாதவர்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகள் வரக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.