மக்காவில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரிகர்களுக்கு அனுமதி!

Share this News:

மக்கா (26 ஜூலை 2021): அடுத்த மாதம் (முஹர்ரம்) முதல் வெளி நாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு உம்ரா செய்ய அனுமதிளிக்கப்படுகிறார்கள்.

கோவிட் பரவல் காரணமாகவும், விமான தடை காரணமாகவும் வெளிநாட்டு ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரிகர்களுக்கு மக்கா மற்றும் மதினாவில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு யாத்ரிகர்களுக்கும் உம்ரா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை உள்நாட்டில் (சவுதியில் ) வசிப்பவர்களுக்கு மட்டுமே ஹஜ் மற்றும் உம்ராவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வருடம் 60ஆயிரம் உள்நாட்டு ஹஜ் யாத்ரிகர்களுக்கு ஹஜ் செய்ய அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் விரைவில் உம்ராவிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எந்த நாடுகளில் அனுமதி வழங்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அதேவேளை தற்போது ஹஜ் முடிந்துள்ள நிலையில் ஹஜ்ஜின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட உம்ரா தவக்கல்னா அப்ளிகேஷன் மூலம் அனுமதி பெற்று உள்நாட்டில் வசிப்போர் மீண்டும் உம்ரா செய்யலாம்.


Share this News:

Leave a Reply