சவூதி விசிட் விசா செல்லுபடி காலம் நீட்டிப்பு!

1733

ரியாத் (14 ஆக 2021): சவுதிக்கு வரும் வெளிநாட்டினரின் காலாவதியான விசிட் விசா செல்லுபடி காலம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கான நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்படாத நாடுகளில் இருந்து பலர் சவூதி திரும்ப முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில் சிலருக்கு விசிட் விசா உள்ளிட்ட விசாக்கள் காலாவதியாகியுள்ள நிலையில் அவர்களின் விசா செல்லுபடி காலம் வரும் செப்டம்பர் 30 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  சவூதி அரேபியாவில் மீண்டும் கனமழை - பொதுமக்களுக்கு சிவில் பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!

இந்த உத்தரவு சவுதி வருகைக்கு தற்காலிக தட்டி விதிக்கப்பட்டுள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகளுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.