சவூதி அரேபியாவில் ஊதியமின்றி சிக்கித் தவித்த தமிழர்கள் நாடு திரும்பினர்!

326

ரியாத் (29 ஆக 2021): சவுதி அரேபியாவின் அல்-ஹஸாவில் மூன்று வருடங்கள் ஊதியமின்றி சிக்கித் தவித்த தமிழர்கள் இருவர் நாடு திரும்பினர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜெயசேகரன் பிரான்சிஸ், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொத்தனார் வேலைக்காக சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவுக்கு சென்றனர்.

முதல் ஆண்டு சம்பளம் சரியாக வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது. சம்பளம் வழங்கப்படாததற்காக தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் வேறொரு போலியான வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஒரு சமூக சேவகரின் தலையீட்டால் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவர்களின் வழக்கு இருவருக்கும் உரிய ஸ்பான்சர் இல்லை என்பதை காரணம் காட்டி வழக்கு தள்ளுபடியாகி விடுதலையாகினர்.

கடந்த மூன்று வருடங்களாக குடியிருப்பு அனுமதி மற்றும் மருத்துவக் காப்பீடு இல்லாமல் கோவிட் காலத்தில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்த இருவரும் ஊருக்குச் செல்ல தடை நீக்கப்பட்டதால் சமூக சேரின் உதவியுடன் ஊருக்குச் சென்றனர்.