இந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்!

1236

இஸ்லாமாபாத் (23 ஏப் 2020): இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடவில்லை, அவர்களின் சாதனைக்காக விளையாடினார்கள் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டியுள்ளார்.

பாகிஸ்தானின் அதிரடி வீரராக இருந்தவர் இன்ஸமாமுல் ஹக், தற்போது பாகிஸ்தான் தேர்வுக் குழு தலைவராக உள்ளார். இவரும் முன்னாள் விரர் ரமீஸ் ராஜாவும் பாகிஸ்தானின் யூடுப் சேனல் ஒன்றின் டாக்‌ஷோவில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இன்சமாமுல் ஹக், “தற்போதைய பாகிஸ்தான் அணி வீரர்கள் இயல்பாகவே திறன் பெற்றிருந்தாலும் சில சமயம் தோல்விக்கு மிகவும் அஞ்சுகிறார்களே என இன்சமாமிடம் ரமிஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இன்சமாம், “ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், அவர்களுக்கு இடம் கிடைக்கும், தோற்றால் அவர்களை கைவிட்டுவிடுவார்கள் என தொடருக்கு தொடர் வீரர்கள் சிந்தித்தால், அவர்களால் முழு திறனுடன் விளையாட முடியாது. இம்ரான் கான் அப்படி தான் ஒரு தொடரில் வீரர்கள் சொதப்பினாலும் அவர்களை நீக்காமல், வாய்ப்பளித்து அடுத்த போட்டியில் சிறப்பாக ஆட வைத்தார்.

‘எங்கள் காலத்தில், இந்தியா பேட்டிங்கில் வலுவாக இருந்தது. பேட்ஸ்மேனாக எங்களது சாதனைகள் அவர்களை விட சிறப்பாக இல்லை. ஆனால் நாங்கள் 30 அல்லது 40 ரன்கள் எடுத்தாலும் அணிக்காக எடுத்தோம். அவர்கள் சதமடித்தாலும், அதனை அணிக்காக செய்யவில்லை, அவர்களுக்காக ஆடினார்கள். அது தான் வித்தியாசம்.” என்றார்.